மாநில சங்கங்களால் நடத்தப்படும் T20 லீக்குகளில் ஊழல் activities நடப்பதாக சந்தேகிக்கப்படுவதால், BCCI-ன் ஊழல் தடுப்பு பிரிவு தீவிர கண்காணிப்பில் இறங்கியுள்ளது.
மாநில சங்கங்களால் நடத்தப்படும் T20 லீக்குகளில் சில அணி உரிமையாளர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் வீரர்கள் சந்தேகத்திற்குரிய நபர்களுடன் தொடர்பில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் (TNPL) சில அணிகளின் செயல்பாடுகள் சந்தேகத்திற்குரியதாக இருந்ததையடுத்து, BCCI-ன் ஊழல் தடுப்பு மற்றும் பாதுகாப்பு பிரிவு (ACSU) இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
வீரர்கள் மற்றும் அதிகாரிகள் தங்கும் விடுதிகளில் யாரைச் சந்திக்கிறார்கள் என்பது தீவிரமாகக் கண்காணிக்கப்படுகிறது. சமீபத்தில், TNPL-ல் விளையாடிய ஒரு வீரர் விதிமுறைகளை மீறி மொபைல் போன் பயன்படுத்தியதற்காக தடை செய்யப்பட்டார். விளையாட்டின் நேர்மையை உறுதி செய்ய சிறிய தவறுகள் கூட பொறுத்துக்கொள்ளப்படாது என்று BCCI செயலர் தெரிவித்துள்ளார்.