காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக நஹானில் உள்ள மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டன.

இமாச்சல பிரதேசத்தில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் நேரிட்ட கொடூரமான சாலை விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர். மாரடைப்பால் உயிரிழந்த ஜெகதீஷ் சர்மா என்பவரின் உடலை சங்க்ரா மருத்துவமனையிலிருந்து அவரது குடும்பத்தினரும் கிராம மக்களும் காரில் கொண்டு சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

அப்போது, மலைப்பாதையில் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் திடீரென அருகில் இருந்த ஆழமான பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக நஹானில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.