வத்திக்கானின் 'Click to Pray' செயலியில் உள்ள பாதுகாப்பு குறைபாட்டால் 7 லட்சத்திற்கும் அதிகமான பயனர்களின் பெயர், மின்னஞ்சல் மற்றும் இருப்பிடத் தகவல்கள் கசிந்துள்ளன. ஒரு சாதாரண பிரவுசர் மூலம் இந்தத் தகவல்களை எளிதாகப் பெற முடியும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
வத்திக்கானின் பிரபலமான 'Click to Pray' செயலி மற்றும் இணையதளத்தில் ஒரு பெரிய பாதுகாப்பு ஓட்டை கண்டறியப்பட்டுள்ளது. ஒரு ஹேக்கர் இந்தச் செயலியின் API-ல் உள்ள IDOR என்ற குறைபாட்டைக் கண்டறிந்துள்ளார், இதன் மூலம் பயனர்களின் தனிப்பட்ட அடையாளத் தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
சுமார் 7 லட்சம் பயனர்களின் பெயர்கள் மற்றும் மின்னஞ்சல்கள் தற்போதும் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளன. இதில் செயலியின் ஊழியர்களின் தகவல்களும் அடங்கும். இந்தத் தரவுகளைப் பயன்படுத்தி மோசடி செய்பவர்கள் பயனர்களை ஏமாற்ற வாய்ப்புள்ளது.