Chick-fil-A நிறுவனம் தனது இணையதளம் மற்றும் மொபைல் ஆப் மூலம் நடத்தப்பட்ட 'credential stuffing' தாக்குதலால் 13,000-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களின் தரவு திருடப்பட்டதை உறுதி செய்துள்ளது.
அமெரிக்க ஃபாஸ்ட் ஃபுட் நிறுவனமான Chick-fil-A, ஜூன் 17 முதல் 19 வரை நடந்த சைபர் தாக்குதலில் 13,322 வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடப்பட்டதாகத் தெரிவித்துள்ளது. மூன்றாம் தரப்பு மூலத்திலிருந்து பெறப்பட்ட கடவுச்சொற்களைப் பயன்படுத்தி ஹேக்கர்கள் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இந்தத் தாக்குதலில் வாடிக்கையாளர்களின் பெயர், மின்னஞ்சல் முகவரி, உறுப்பினர் எண், கிரெடிட் பேலன்ஸ் மற்றும் டெபிட்/கிரெடிட் கார்டின் கடைசி நான்கு இலக்கங்கள் போன்ற முக்கியமான தகவல்கள் திருடப்பட்டுள்ளன. மேலும், பிறந்த தேதி மற்றும் முகவரியும் திருடப்பட்டிருக்கலாம் என்று நிறுவனம் கூறியுள்ளது.
பாதிக்கப்பட்ட கணக்குகளை நிறுவனம் உடனடியாக வெளியேற்றியுள்ளதுடன், பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்குத் தேவையான இழப்பீட்டு வெகுமதிகளையும் வழங்கியுள்ளது. வாடிக்கையாளர்கள் தங்களது கடவுச்சொற்களை உடனடியாக மாற்றிக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.