உங்கள் பழைய போனை விற்கும் முன் வெறும் ஃபேக்டரி ரீசெட் செய்வது மட்டும் போதாது. உங்கள் தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பாதுகாக்க சில முக்கியமான வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

நீங்கள் உங்கள் மொபைல் போனை விற்கத் திட்டமிட்டிருந்தால், ஃபேக்டரி ரீசெட் செய்வதன் மூலம் மட்டுமே தரவுகள் முழுமையாக அழிந்துவிடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் தனிப்பட்ட தரவுகள் மற்றும் மீடியாக்கள் மற்றவர்களின் கைகளில் சிக்க வாய்ப்புள்ளது. எனவே, முதலில் உங்கள் அனைத்துத் தரவுகளையும் பேக்கப் எடுத்துவிட்டு, கூகுள் மற்றும் ஆப்பிள் ஐடி போன்ற அனைத்து முக்கிய கணக்குகளிலிருந்தும் லாக் அவுட் செய்ய வேண்டும்.

அடுத்ததாக, 'Find My Device' அல்லது 'Find My iPhone' வசதியை அணைப்பதும், சிம் கார்டு மற்றும் இ-சிம் (eSIM) ஆகியவற்றை அகற்றுவதும் அவசியம். ரீசெட் செய்த பிறகு, உங்கள் கூகுள் அல்லது ஆப்பிள் கணக்கிலிருந்து அந்த பழைய சாதனத்தை நீக்கிவிடுவது உங்கள் தனியுரிமையை உறுதிப்படுத்தும். இந்த முறைகளைப் பின்பற்றினால் மட்டுமே உங்கள் தரவுகள் பாதுகாப்பாக இருக்கும்.