ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்காக வெறும் ₹39 விலையில் ஒரு மலிவான டேட்டா ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் பயனர்கள் தினமும் 3GB அதிவேக இணையத்தைப் பெறலாம்.
ஏர்டெல் தனது தளத்தில் பல்வேறு ரீசார்ஜ் திட்டங்களை வழங்கினாலும், ₹39 விலையிலான இந்தத் திட்டம் மிகவும் மலிவானது. இந்தத் திட்டத்தின் மூலம் பயனர்கள் தடையற்ற இணையப் பயன்பாட்டிற்காக தினமும் 3GB அதிவேக டேட்டாவைப் பெற முடியும்.
இருப்பினும், இந்தத் திட்டத்தில் அன்லிமிட்டட் கால்கள் அல்லது SMS வசதிகள் இல்லை. இந்த ரீசார்ஜ் திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 3 நாட்கள் மட்டுமே, இது கூடுதல் டேட்டா தேவைப்படும்வர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.