வளர்ந்து வரும் பொருளாதார நாடுகள், குறிப்பாக இந்தியாவில், AI தொழில்நுட்பத்தினால் வேலை இழப்பு ஏற்படும் அபாயம் குறைவு என்று உலக வங்கி தெரிவித்துள்ளது. இருப்பினும், தகவல் தொழில்நுட்ப சேவை மற்றும் கால் சென்டர் போன்ற துறைகள் அதிக ஆபத்தில் உள்ளன.

வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் வேலைவாய்ப்புகளுக்கு AI ஏற்படுத்தும் அச்சுறுத்தல், வளர்ந்த நாடுகளை விடக் குறைவு என்று உலக வங்கியின் புதிய அறிக்கை கூறுகிறது. பணக்கார நாடுகளில் 14.2% வேலைகள் AI பாதிப்பிற்கு உள்ளாக வாய்ப்புள்ள நிலையில், குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் இது வெறும் 4.5% மட்டுமேயாகும். இந்த நாடுகள் இன்னும் விவசாயம் மற்றும் சிறு தொழில்களைச் சார்ந்து இருப்பதால் வேலை இழப்பு குறைவாக இருக்கும் என்று அறிக்கை கூறுகிறது.

இருப்பினும், பிசினஸ் ப்ராசஸ் அவுட்சோர்சிங், கால் சென்டர்கள் மற்றும் மென்பொருள் சேவைகள் போன்ற துறைகளில் வேலை இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்று உலக வங்கி எச்சரித்துள்ளது. பெரிய மொழி மாதிரிகளுக்கு (LLM) பதிலாக, விவசாயம், கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற குறிப்பிட்ட துறைகளுக்கான சிறிய மற்றும் குறைந்த செலவிலான AI மாதிரிகளை (SLM) உருவாக்குவதில் வளர்ந்து வரும் நாடுகள் கவனம் செலுத்த வேண்டும் என்று உலக வங்கியின் தலைமை பொருளாதார நிபுணர் இந்தமேர்மித் கில் பரிந்துரைத்துள்ளார்.