ஆந்த்ரோபிக் நிறுவனம் தனது கிளாட் AI மூலம் உருவாக்கப்படும் அனைத்து உரைகள் மற்றும் கோப்புகளில் வாட்டர்மார்க்கை சேர்த்துள்ளது. இது மனிதர்களால் பார்க்க முடியாது.
AI மூலம் உருவாக்கப்பட்ட உள்ளடக்கங்களை எளிதாகக் கண்டறியும் நோக்கில், ஆந்த்ரோபிக் நிறுவனம் தனது கிளாட் (Claude) மாதிரியின் அனைத்து வெளியீடுகளிலும் டிஜிட்டல் வாட்டர்மார்க்கை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த வாட்டர்மார்க் மனிதக் கண்களுக்குத் தெரியாது, ஆனால் சிறப்பு மென்பொருட்கள் மூலம் இதை அடையாளம் காண முடியும். இதன் மூலம் தவறான தகவல்களைத் தடுக்கவும், AI பயன்பாட்டில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரவும் முடியும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.