SpaceXAI மற்றும் Cursor இணைந்து 'Grok Bot' என்ற புதிய AI ஏஜென்ட்டை அறிமுகப்படுத்தியுள்ளன. இது வெறும் கேள்விகளுக்கு பதில் சொல்வதோடு மட்டுமல்லாமல், தனக்கென ஒரு தனி கணினியைப் பயன்படுத்தி இணையதளங்கள் மற்றும் செயலிகளில் வேலை செய்யும் திறன் கொண்டது.

वीडियो लोड हो रहा है...

புதிய 'குரோக் பாட்' (Grok Bot) தற்போது பீட்டா பதிப்பில் கிடைக்கிறது. இது ஒரு சாதாரண சாட்போட் அல்ல, மாறாக ஒரு 'AI teammate' போல செயல்படும். ஒவ்வொரு ஏஜென்ட்டிற்கும் கிளவுடில் ஒரு தனி கணினி வழங்கப்படுவதால், இது பயனரின் செயலிகள், மின்னஞ்சல்கள் மற்றும் இணையதளங்களில் நேரடியாக நுழைந்து பணிகளைச் செய்யும் capability கொண்டுள்ளது.

வாடிக்கையாளர் தகவல்களைப் புதுப்பிப்பது, இன்வாய்ஸ்களைச் செயலாக்குவது மற்றும் மென்பொருள் பிழைகளைச் சரிசெய்வது போன்ற பல கட்டப் பணிகளை இது தானாகவே செய்யும். பயனர்கள் ஒரு குறிப்பிட்ட வேலையை எப்படிச் செய்ய வேண்டும் என்பதைக் காட்டினால், அந்த முறையை கற்றுக்கொண்டு மீண்டும் மீண்டும் அதே வேலையைச் செய்யும் திறன் கொண்டது இது. தற்போது இது டெஸ்க்டாப் மற்றும் iOS பயனர்களுக்குக் கிடைக்கிறது.