கூகுள் தனது புதிய பிக்சல் 11 ஸ்மார்ட்போன் தொடரை அறிமுகப்படுத்த உள்ளது. நியூயார்க்குக்கும் இந்தியாவிற்கும் இடையிலான நேர வித்தியாசத்தால் இந்தியாவில் இது ஆகஸ்ட் 13 அன்று நடைபெறும்.
கூகுள் தனது புதிய 'மேட் பை கூகுள்' நிகழ்வின் மூலம் சக்திவாய்ந்த பிக்சல் 11 தொடரை அறிமுகப்படுத்தத் தயாராக உள்ளது. இதில் பிக்சல் 11, பிக்சல் 11 ப்ரோ, பிக்சல் 11 ப்ரோ எக்ஸ்எல் மற்றும் பிக்சல் 11 ப்ரோ ஃபோல்ட் ஆகிய நான்கு முக்கிய ஸ்மார்ட்போன்கள் இடம்பெறலாம்.
இந்த நிகழ்வு அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஆகஸ்ட் 12 அன்று நடைபெறுகிறது. இருப்பினும், நியூயார்க்கை விட இந்தியா 9-10 மணிநேரம் முன்னதாக இருப்பதால், இந்தியாவில் இந்த நிகழ்வு ஆகஸ்ட் 13 அன்று நடைபெறும். ஆகஸ்ட் 12 முதல் பிக்சல் 11 ப்ரோ மாடலுக்கான முன்பதிவு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிக்சல் 11 ப்ரோ மாடலில் 6.3 இன்ச் OLED டிஸ்ப்ளே, 120Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் கூகுள் டென்சர் G6 சிப்செட் ஆகியவை இடம்பெறலாம் எனத் தெரிகிறது. மேலும், இது 16GB வரை ரேம் மற்றும் அதிகப்படியான சேமிப்புத் திறனை வழங்கும்.