LPG வாடிக்கையாளர்கள் ஆகஸ்ட் 16-ஆம் தேதிக்குள் e-KYC செயல்முறையை முடிக்க வேண்டும். இல்லையெனில் Indane, HP அல்லது Bharat Gas இணைப்புகள் நிறுத்தப்படலாம்.
LPG வாடிக்கையாளர்கள் தங்கள் இணைப்பைத் தொடர ஆகஸ்ட் 16-ஆம் தேதிக்குள் e-KYC-யை பூர்த்தி செய்ய வேண்டும் என்று எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் எச்சரித்துள்ளன. இந்த காலக்கெடுவுக்குப் பிறகு, மானிய விலையில் சிலிண்டர்களைப் பெறுவதில் சிக்கல் ஏற்படலாம் அல்லது இணைப்பு இடைநிறுத்தப்படலாம்.
இந்த செயல்முறையை வாடிக்கையாளர்கள் வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் அல்லது தனது விநியோகஸ்தரை அணுகி எளிதாக முடித்துக் கொள்ளலாம். குறிப்பாக இந்தியன் ஆயில் வாடிக்கையாளர்கள் 'Indian Oil One' செயலி மூலம் இதை விரைவாகச் செய்ய முடியும்.