லண்டனின் ஒரு சொகுசு ஹோட்டலில் 29 வயது சவூதி இளவரர் மர்மமான முறையில் உயிரிழந்தார். மது மற்றும் போதைப்பொருள் பயன்பாட்டால் அவர் உயிரிழந்ததாக பிரிட்டிஷ் நீதிமன்ற விசாரணை வெளிப்படையாகக் கூறியுள்ளது.
லண்டனில் உள்ள ஒரு ஆடம்பர ஹோட்டலில் 29 வயதான சவூதி இளவரரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இந்த மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்ட நிலையில், பிரிட்டிஷ் நீதிமன்றத்தின் விசாரணை அறிக்கை முக்கியத் தகவல்களை வெளியிட்டுள்ளது.
அவர் மது மற்றும் போதைப்பொருட்களைப் பயன்படுத்தியதாலேயே மரணம் ஏற்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு சொகுசு ஹோட்டல் அறையில் நடந்த போதைப்பொருள் மற்றும் மது விருந்திற்குப் பிறகு அவர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.