பிரான்சின் தென்மேற்கு மற்றும் ஸ்பெயினின் மத்தியப் பகுதிகளில் காட்டுத்தீ தீவிரமடைந்துள்ளது. பிற ஐரோப்பிய நாடுகள் ஸ்பெயின் மற்றும் பிரான்சுக்கு உதவிகளை அனுப்பி வருகின்றன.
பிரான்சின் தென்மேற்கு மற்றும் மாட்ரிட் அருகிலுள்ள ஸ்பெயினின் மத்தியப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகக் கட்டுப்படுத்த முடியாத காட்டுத்தீ பரவி வருகிறது. இது அந்தந்த நாடுகளின் அமைதிக் காலத்தில் கண்ட மிக மோசமான காட்டுத்தீகளில் ஒன்றாகும்.
தீயினால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்க இதுவரை 3,00,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.