ஜப்பானின் குமாவமோட்டோவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்திற்குப் பிறகு மீட்புப் பணிகள் தீவிரமடைந்துள்ளன. தற்காலிக முகாம்களில் தங்கியுள்ள மக்கள் கடும் வெப்பம் மற்றும் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்கொள்கின்றனர்.
ஜப்பானின் கியூஷு தீவில் ஏற்பட்ட 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் குறைந்தது 25 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளனர். இடிந்து விழுந்த கட்டிடங்களுக்கு அடியில் சிக்கியிருப்பவர்களைக் கண்டறிய மீட்புப் படையினர் போராடி வருகின்றனர். வணிக வளாகங்கள் மற்றும் தொழிற்சாலைகள் கடுமையாக சேதமடைந்துள்ளன.
தற்போது ஆயிரக்கணக்கான மக்கள் முகாம்கள் மற்றும் வாகனங்களில் தங்கியுள்ளனர். மின்சாரம் மற்றும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதுடன், தொடர்ச்சியான நில அதிர்வுகளும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. 33 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை எட்டக்கூடும் என்பதால், வெப்பத் தாக்கத்தால் (heatstroke) உயிரிழப்புகள் ஏற்படக்கூடும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.