ரஷ்யாவின் வான்வழித் தாக்குதலில் உக்ரைனில் 14 பேர் கொல்லப்பட்டனர். ரஷ்யாவின் இந்தத் பயங்கரத் தாக்குதலில் இருந்து உயிரைக் காக்க சர்வதேச உதவி தேவை என்று அதிபர் ஜெலென்ஸ்கி வலியுறுத்தியுள்ளார்.

ரஷ்யாவின் வான்வழித் தாக்குதலில் உக்ரைனின் பல்வேறு பகுதிகளில் குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர். கிழக்குத் தினிப்ரோபெட்ரோவ்ஸ்க் மற்றும் மேற்கு லெவிவ் பகுதிகளில் மிக மோசமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. ரஷ்யா 70-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளையும், 280-க்கும் மேற்பட்ட ட்ரோன்களையும் ஏவி இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது.

உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இந்தத் தாக்குதல்களை 'ரஷ்ய பயங்கரம்' என்று கண்டித்துள்ளார். மக்களின் உயிரைப் பாதுகாப்பதே மிக முக்கியமான பணி என்று கூறிய அவர், ரஷ்யாவின் ஏவுகணை அச்சுறுத்தலில் இருந்து உக்ரைனைப் பாதுகாக்க சர்வதேச சமூகத்தின் உடனடி உதவி அவசியம் என்றும் வலியுறுத்தினார். ஏவுகணைத் தடுப்பு அமைப்புகளுக்கான தாமதமான விநியோகம் உயிரிழப்புகளை அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.