ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் உள்ள ஒரு உணவகத்திற்கு அருகில் ஏற்பட்ட வெடிப்பில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் 15 பேர் காயமடைந்துள்ளனர்.
மாஸ்கோவின் குட்ரின்ஸ்காயா சதுக்கத்தில் உள்ள ஒரு உணவகத்திற்கு அருகில் சனிக்கிழமை மாலை ஒரு சக்திவாய்ந்த வெடிப்பு ஏற்பட்டது என்று ரஷ்ய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இரவு சுமார் 8:10 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
மாஸ்கோ காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்த வெடிப்பில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 15 பேர் பல்வேறு நிலைகளில் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களுக்குத் தேவையான மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. வெடிப்புக்கான காரணம் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்தப் பகுதியில் போக்குவரத்துத் தடை செய்யப்பட்டுள்ளதுடன், பாரிகடநாயா மெட்ரோ நிலையத்தின் நுழைவாயில்களும் மூடப்பட்டுள்ளன.