பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் அமைதிப் பேரணியின் போது நடந்த தற்கொலைத் தாக்குதலில் காவலர்கள் உட்பட குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலில் இருபதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை அமைதிப் பேரணியின் போது தற்கொலை வெடிப்பு நிகழ்ந்தது. இந்தத் தாக்குதலில் காவலர்கள் உட்பட குறைந்தது 14 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த வெடிப்பில் இருபதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், மேலும் பாதுகாப்புப் படையினர் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.