குண்டு வெடித்தவுடன் அந்தப் பகுதியில் பெரும் குழப்பமும் பதற்றமும் ஏற்பட்டது.
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள ஸ்வாட் பகுதியில் அமைதி பேரணியின் போது தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்டது.
ஒரு காவல் நிலையத்திற்கு அருகிலுள்ள நெரிசலான சந்திப்பில் இந்த வெடிப்பு நிகழ்ந்துள்ளது. அப்போது அங்கு குடிமைச் சமூகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.