அமெரிக்காவின் நான்கு மாநிலங்கள் மெட்டா நிறுவனத்திற்கு எதிராகப் பெரும் சட்டப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளன. ஆகஸ்ட் 12, 2026 அன்று ஓக்லாந்து நீதிமன்றத்தில் இந்த விசாரணை தொடங்கும்.
மெட்டா நிறுவனம் சமூக வலைதளங்கள் மூலம் குழந்தைகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியதாகக் கூறி நான்கு அமெரிக்க மாநிலங்கள் வழக்குத் தொடர்ந்துள்ளன. இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் ஆகியவற்றைத் திட்டமிட்டு குழந்தைகளை அடிமையாக்கும் வகையில் வடிவமைத்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதற்காக மெட்டா நிறுவனத்திற்கு 1.4 டிரில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்று மாநிலங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
இந்த விசாரணையின் முக்கிய சாட்சியாக மார்க் ஜுக்கர்பெர்க்கை அழைக்கத் திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே மெட்டா நிறுவனம் பல வழக்குகளில் இழப்பு மற்றும் அபராதங்களைச் சந்தித்துள்ளது. மெட்டா நிறுவனம் இந்தத் குற்றச்சாட்டுகளை மறுத்து வருகிறது, மேலும் இது ஒரு பொதுவான மனநலப் பிரச்சனை என்று வாதிடத் தயாராக உள்ளது.