இந்தோனேசியாவின் பாலி அருகே பயணித்த படகில் ஏற்பட்ட தீ விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் மீட்கப்பட்டுள்ளனர். இது கடந்த சில நாட்களில் நடந்த இரண்டாவது விபத்தாகும்.

இந்தோனேசியாவின் சுற்றுலாத் தீவான பாலி அருகே புதன்கிழமை காலை பயணித்த படகில் தீ விபத்து ஏற்பட்டது. கடற்படை மற்றும் மீட்புப் படையினர் இணைந்து சுமார் 114 பயணிகள் மற்றும் ஊழியர்களைப் பத்திரமாக மீட்டனர். இந்த விபத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டதாகத் இதுவரை எந்தத் தகவலும் இல்லை.

பாதிக்கப்பட்ட படகிலிருந்து பயணிகள் மூன்று வெவ்வேறு படகுகள் மூலம் வெளியேற்றப்பட்டனர். மீட்புப் படையினர் தரப்பில் கூறப்படுவதின்படி, 30 பயணிகள் பாலிக்கும், 59 பயணிகள் லோம்பாக்கின் லெம்பர்டு துறைமுகத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகளுக்காக ஹெலிகாப்டர்களும் பயன்படுத்தப்பட்டன.

இந்தோனேசியாவில் அடிக்கடி நிகழும் கடல்சார் விபத்துகளுக்குக் குறைந்த பாதுகாப்புத் தரநிலைகளும் கணிக்க முடியாத வானிலையும் முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன. கடந்த வாரம் ஜாவா தீவின் அருகே நடந்த விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.