உக்ரைன் ரஷ்யா மீது 800-க்கும் மேற்பட்ட ட்ரோன்களை ஏவி மிகப்பெரிய தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் மாஸ்கோ மற்றும் ரோஸ்டோவ் பகுதிகளில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
உக்ரைன் ரஷ்யா மீது இதுவரை இல்லாத ஒரு மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளது. 800-க்கும் மேற்பட்ட ட்ரோன்களைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் மாஸ்கோ மற்றும் ரோஸ்டோவ் பகுதிகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் 6 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாஸ்கோ அருகே உள்ள ஒரு கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதுடன், உக்ரைன் ரஷ்யாவின் ஏவுகணை தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றையும் குறிவைத்துத் தாக்கியுள்ளது. இருப்பினும், 1400 ட்ரோன்களைக் கீழே தள்ளியதாக ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.