ஈரானுக்கு எதிராக ராணுவ நடவடிக்கைகளைத் தவிர்த்து, பொருளாதார அழுத்தங்கள் மூலம் தீர்வுகாண ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார். ஹார்முஸ் ஒப்பந்தம் தொடர்பாக இன்னும் இழுபறி நீடிக்கிறது.

ஈரானுடனான மோதலில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது அணுகுமுறையை மாற்றியுள்ளார். நேரடி ராணுவத் தாக்குதலுக்குப் பதிலாக, கடுமையான பொருளாதாரத் தடைகள் மற்றும் அழுத்தங்கள் மூலம் ஈரானை பணிய வைக்க அவர் விரும்புகிறார்.

இருப்பினும், ஹார்முஸ் நீரிணை தொடர்பான ஒப்பந்தங்களில் இன்னும் உடன்பாடு ஏற்படவில்லை. நீரிணையினைத் திறக்க ஈரான் சில நிபந்தனைகளை விதித்துள்ள நிலையில், அமெரிக்கா தனது போர்க்கப்பல்களை அங்கு நிலைநிறுத்தி அழுத்தத்தை அதிகரித்துள்ளது.