பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் கடும் வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடும் வறட்சியால் கிரீஸ் மற்றும் ஸ்பெயினில் புதிய காட்டுத்தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளன.
ஐரோப்பாவின் பல பகுதிகள் தற்போது கடுமையான வெப்ப அலையையும், முன்னெப்போதும் இல்லாத வறட்சியையும் சந்தித்து வருகின்றன. பிரிட்டன் மற்றும் பிரான்சில் வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. மனிதர்களால் தூண்டப்பட்ட காலநிலை மாற்றத்தால், ஐரோப்பா தற்போது உலகின் மிக வேகமாக வெப்பமடையும் கண்டமாக மாறியுள்ளது.
பிரான்சில் 70% நிலப்பரப்பில் தண்ணீர் பயன்பாட்டிற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில், கிரீஸின் ஏதென்ஸ் நகருக்கு அருகிலும், தென்மேற்கு ஸ்பெயினிலும் காட்டுத்தீ வேகமாக பரவி வருவதால் நூற்றுக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும், ரைன் மற்றும் விஸ்டுலா போன்ற முக்கிய ஆறுகளின் நீர்மட்டம் வரலாறு காணாத அளவுக்குக் குறைந்துள்ளது.