கொலம்பியாவின் பசிபிக் கடற்கரைப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பலர் காயமடைந்ததோடு, சொத்துக்களுக்கும் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாக ஆளுநர் தெரிவித்துள்ளார்.

கொலம்பியாவின் பசிபிக் கடற்கரை பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த இயற்கை சீற்றத்தால் பல கட்டிடங்கள் சேதமடைந்ததோடு, மக்கள் பெரும் அச்சத்திற்கு உள்ளாகினர்.

இந்த சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளதாக ஆளுநர் உறுதிப்படுத்தியுள்ளார். மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.