ரேப் சூப்பர் ஸ்டார் டுபாக் ஷக்குர் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் கேங் பாஸ் டுயான் 'கெஃபே டி' டேவிஸின் விசாரணை தொடங்கியுள்ளது. அவர் தனது குற்றத்தை மறுத்துள்ளார்.
1996 ஆம் ஆண்டு செப்டம்பர் 7 ஆம் தேதி ரேப் நட்சத்திரமான டுபாக் ஷக்குரை கொன்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஒரே நபர் டுயான் 'கெஃபே டி' டேவிஸ் ஆவார். ஒரு குற்றக்குழுவை ஊக்குவிக்கும் நோக்கில் கொடூரமான ஆயுதத்தைப் பயன்படுத்தி கொலை செய்ததாக லாஸ் வேகாஸில் அவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
63 வயதான இந்த முன்னாள் கேங் பாஸ், தான் நிரபராதி என்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். இந்த வழக்கின் பின்னணி மற்றும் சந்தேக நபர் குறித்த விவரங்களை பிபிசி செய்தியாளர் அனுஷ்கா முடண்டா-டக்ஹெர்டி விளக்கியுள்ளார்.