கொலம்பியாவின் பசிபிக் பிராந்தியத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 132 பேர் உயிரிழந்தனர். இப்பகுதி 'பசிபிக் ரிங் ஆஃப் ஃபயர்' பகுதியில் அமைந்துள்ளது.
கொலம்பியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பெரும் உயிர்ச்சேத ஏற்பட்டுள்ளது. இதுவரை 132 பேர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டிடங்கள் இடிந்து விழுந்தபோது மக்கள் அலறியடித்துக்கொண்டு வெளியேறு காட்சிகள் வெளியாகியுள்ளன.
இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 21 முறை அதிர்வுகள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதன் விளைவாக 1,575 வீடுகள், 18 சுகாதார மையங்கள் மற்றும் 52 பள்ளிகள் கடுமையாக சேதமடைந்துள்ளன.