அமெரிக்க ராணுவ நடவடிக்கைகள் மற்றும் போர் விமானங்களின் தகவல் பரிமாற்றங்களை ஒட்டுக்கேட்டதாக தென் கொரியாவில் இரண்டு முன்னாள் சீன ராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தென் கொரிய காவல்துறை, அமெரிக்க ராணுவத்துடன் தொடர்புடைய ராணுவ நடவடிக்கைகளை உளவு பார்த்ததாக இரண்டு முன்னாள் சீன ராணுவ வீரர்களை தனித்தனி வழக்குகளில் கைது செய்துள்ளது. போர் விமானங்களுக்கும் தரைக் கட்டுப்பாட்டு மையத்திற்கும் இடையிலான தகவல்களை இடைமறித்ததாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர், விமான தளத்திற்கு அருகில் உள்ள ஹோட்டலில் ரேடியோ ரிசீவர் மற்றும் லேப்டாப் மூலம் தகவல்களை சேகரித்துள்ளார். மற்றொருவர், சியோல் அருகிலுள்ள அமெரிக்க ராணுவ தலைமையகத்திலிருந்து கூட்டுப் பயிற்சிகள் மற்றும் ஆயுத நகர்வுகள் குறித்த ரகசியங்களை சேகரித்துள்ளார். இதற்காக அவர் ஒரு கொரிய பெண்ணிற்கு பணம் கொடுத்து தகவல்களைப் பெற்றதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.