சென்சார் டவர் அறிக்கையின்படி, GTA6 முன்பதிவுகளில் 89% பேர் $80 ஸ்டாண்டர்ட் எடிஷனை விட $100 அல்டிமேட் எடிஷனைத் தேர்ந்தெடுத்துள்ளனர். இந்த அதீத ஆர்வம் கேமிங் உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
டிஜிட்டல் இன்டெலிஜென்ஸ் நிறுவனமான சென்சார் டவர் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, GTA6-க்கான முன்பதிவுகளில் 89% பேர் $100 மதிப்புள்ள அல்டிமேட் எடிஷனை வாங்கியுள்ளனர். எக்ஸ்பாக்ஸ் பயனர்களில் 90% பேரும், பிளேஸ்டேஷன் பயனர்களில் 88.5% பேரும் இந்த விலையுயர்ந்த பதிப்பையே விரும்புகின்றனர்.
சென்சார் டவரின் வீடியோ கேம் இன்சைட்ஸ் எஸ்பிவி கார்ல் கோன்டஸ் கூறுகையில், முன்பதிவு காலத்தில் பிரீமியம் பதிப்புகள் சிறப்பாக செயல்படும் என்று கூறினாலும், 90% என்ற இந்த அளவு முன்னெப்போதும் பார்த்ததில்லை என்று வியந்துள்ளார். அல்டிமேட் எடிஷனில் கூடுதல் வாகனங்கள், ஆயுதங்கள் மற்றும் தனித்துவமான கஸ்டம் மோட் ஷாப் போன்ற அம்சங்கள் இருப்பதால் பயனர்கள் இந்த கூடுதல் செலவை மேற்கொள்கின்றனர்.