உஜ்ஜயினி மஹாகால் கோவில் வாசலில் ஆயிரக்கணக்கான செருப்புகளுக்கு மத்தியில் தனது செருப்பைத் தேட முடியாமல் தவித்த ஒருவருக்கு, ChatGPT உதவியுடன் அவர் செருப்பைத் தேடிக் கண்டுபிடித்தார்.

மஹாகால் கோவில் போன்ற நெரிசலான இடங்களில் செருப்புகளைக் கழற்றி வைப்பது ஒரு சவாலான காரியம். கோவாவைச் சேர்ந்த சுபங்கா போர்க்கர் தனது செருப்பைத் தேட முடியாமல் திணறியபோது, அவர் ஒரு புதுமையான வழியைப் பயன்படுத்தினார். அவர் தனது செருப்பின் புகைப்படத்தையும், செருப்புகள் வைக்கப்பட்டிருக்கும் இடத்தின் வீடியோவையும் ChatGPT-யிடம் பதிவேற்றினார்.

AI அந்தப் புகைப்படங்களை நுணுக்கமாக ஆய்வு செய்து, செருப்பு ரேக்கின் வலதுபுறம், நடுப்பகுதியில் உள்ள குவியலுக்கு அடியில் இருப்பதாகக் குறிப்பிட்டது. சுபங்கா அங்கு சென்று பார்த்தபோது, உண்மையில் அவரது செருப்பு அங்கேயே இருந்தது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.