கான்ஸ் சர்வதேச திரைப்பட விழாவின் 79வது பதிப்பில் ஐஸ்வர்யா ராய் பச்சன் அணிந்திருந்த டோனி வார்டு கcouture உடை உலகையே வியக்க வைத்துள்ளது. 7,000 முத்துக்கள் மற்றும் 40 மீட்டர் பட்டுத் துணியால் உருவான இந்த உடைக்கு 600 மணிநேரம் தேவைப்பட்டது.
கான்ஸ் திரைப்பட விழாவின் தொடக்க காலத்திலிருந்து இன்றுவரை ஐஸ்வர்யா ராய் பச்சன் தனது வசீகரமான தோற்றத்தால் ரசிகர்களை கட்டிப்போட்டு வருகிறார். இந்த ஆண்டு, அவர் பாரம்பரிய இந்திய உடைகளைத் தாண்டி, நவீன காலத்து உடையில் களமிறங்கி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். ஸ்டைலிஸ்ட் மோகித் ராயின் வழிகாட்டுதலில் அவர் ஒரு காலத்தால் அழியாத அழகிய தோற்றத்தை வெளிப்படுத்தினார்.
டோனி வார்டு வடிவமைத்த இந்த பிரத்யேக வெள்ளை நிற கவுன், நுணுக்கமான கைவேலைப்பாடுகளுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். இதில் 7,000-க்கும் மேற்பட்ட முத்துக்கள் மற்றும் சுமார் 40 மீட்டர் சில்க் டாஃபெட்டா பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த கலைப்படைப்பை உருவாக்க சுமார் 600 மணிநேரம் செலவிடப்பட்டுள்ளது என்று வடிவமைப்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்த உடையில் ஒரு வெள்ளை நிற கேப் (cape) கூடுதல் அழகைச் சேர்த்தது. சின்தன் ஷா மற்றும் தரங் அகர்வால் ஆகியோரின் உதவியுடன் உருவாக்கப்பட்ட இந்த தோற்றத்தில், ஐஸ்வர்யா குறைந்தபட்ச மேக்கப் மற்றும் வைர ஆபரணங்களை அணிந்து தேவதை போன்ற தோற்றத்தைப் பெற்றார்.