1945 ஹிரோஷிமா அணு குண்டுத் தாக்குதலின் சிதைவுகளில் விஞ்ஞானிகள் ஒரு புதிய வகை பொருளைக் கண்டறிந்துள்ளனர். சிலிக்கான் நிறைந்த இந்த புதிய பொருள் 'ஹிரோஷிமைட்' என்று அழைக்கப்படுகிறது.

ஹிரோஷிமா அணு குண்டுத் தாக்குதலின் போது உருவான விசித்திரமான ஒரு புதிய உலோகத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்த பொருள் பூமியில் இதற்கு முன்பு ஒருபோதும் காணப்படாத ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

சிலிக்கான் நிறைந்த இந்த புதிய பொருளை 'ஹிரோஷிமைட்' என்று ஆராய்ச்சியாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர். 81 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழ்ந்துள்ள இந்த அறிவியல் கண்டுபிடிப்பு, அணுக்கரு வெடிப்புகளின் தாக்கத்தைப் புரிந்துகொள்ள பெரிதும் உதவும்.