பாகிஸ்தானில் தேள்களைப் பயன்படுத்தி போதைப்பொருள் பயன்படுத்துவது ஒரு புதிய மற்றும் ஆபத்தான போக்காக மாறிவருகிறது. இது மக்களின் மனநலம் மற்றும் உயிருக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் கஞ்சா மற்றும் அபினிக்கும் அப்பால், தேள்களைப் பயன்படுத்தி போதைப்பொருள் உட்கொள்ளும் ஒரு விசித்திரமான போக்கு அதிகரித்து வருகிறது. 1960-களில் தொடங்கிய இந்த பழக்கம், தற்போது பலரையும் ஈர்த்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்க.

தேள்களைக் கொன்று, அவற்றை வெயிலில் உலர்த்தி, பின் பொடி செய்து கஞ்சா அல்லது அபினியுடன் கலந்து புகைப்பார்கள். சில நேரங்களில் தேள் பொடியை நேரடியாகவும் சுவாசிக்கிறார்கள். இந்த போதை ஒருவரை சுமார் 10 மணி நேரம் சுயநினைவின்றி வைத்திருக்கும் திறன் கொண்டது.

இந்த போதைப்பொருள் பயன்பாடு மனிதனின் மனநலனைப் கடுமையாகப் பாதிக்கிறது. ஒருமுறை இந்தத் தேள் போதையை அனுபவித்தால், ஒருவரது மனநிலை நிரந்தரமாகப் பாதிக்கப்படலாம் அல்லது உயிருக்கே ஆபத்தாக முடியலாம் என்பது எச்சரிக்கப்படுகிறது.