நெதர்லாந்தில் வளர்ந்த இந்திய வம்சாவளி இரு பெண்கள், சிறுவயதிலிருந்தே நண்பர்களாக இருந்தனர். ஆனால், சமீபத்திய DNA சோதனையில் அவர்கள் இருவரும் உயிரியல் ரீதியாக சகோதரிகள் என்பது தெரியவந்துள்ளது.

நெதர்லாந்தில் வளர்க்கப்பட்ட இந்திய வம்சாவளி இரு பெண்கள், கடந்த 30 ஆண்டுகளாக நெருங்கிய நண்பர்களாக இருந்துள்ளனர். ஆனால், ஒரு DNA சோதனை மூலம் அவர்கள் இருவரும் உண்மையில் ரத்த உறவு கொண்ட சகோதரிகள் என்பது தெரியவந்துள்ளது.

சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் இருவரும் தனித்தனியாக தத்தெடுக்கப்பட்டனர். நீண்ட கால நட்பிற்குப் பிறகு இந்த உண்மை தெரியவந்தது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.