மேற்கத்திய நாடுகளின் புதிய தடைகளுக்குப் பிறகு, ரஷ்யா தனது டிஜிட்டல் சொத்து மற்றும் கிரிப்டோகரன்சி சந்தையை முறைப்படுத்த புதிய விதிகளை விரைவாக அமல்படுத்தத் தயாராகி வருகிறது. செப்டம்பர் மாதத்திற்குள் புதிய சட்டக் கட்டமைப்பு நடைமுறைக்கு வரும்.

ரஷ்யாவின் மத்திய வங்கி, கிரிப்டோகரன்சி சந்தையை ஒழுங்குபடுத்துவதற்கான புதிய வரைவு விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. டிஜிட்டல் சொத்துக்களைப் பாதுகாக்கும் 'டிஜிட்டல் டெபாசிட்டரிகளை' உருவாக்க இந்தத் திட்டம் வழிவகை செய்கிறது. இந்த நிறுவனங்கள் வழங்கும் சேவைகளைப் பொறுத்து, 50 மில்லியன் முதல் 250 மில்லியன் ரூபிள் வரை குறைந்தபட்ச மூலதனத்தைக் வைத்திருக்க வேண்டும் என்று விதிமுறை கூறுகிறது.

ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்ய கிரிப்டோ நிறுவனங்களைக் குறிவைத்து புதிய தடைகளை அறிவித்த நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதம் அமலுக்கு வரவுள்ள புதிய டிஜிட்டல் சொத்துச் சட்டத்தின் கீழ், இந்த விதிமுறைகள் பொது மதிப்பாய்விற்குத் திறக்கப்பட்டுள்ளன. இது டிஜிட்டல் சொத்து பரிமாற்றம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.