ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் மற்றும் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பழங்குடியினப் பெண்கள் இப்போது குஜராத்தின் சானந்த் பகுதியில் குறைக்கடத்தி (semiconductor) உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். மலேசியாவில் பயிற்சி பெற்ற இவர்கள் இந்திய தொழில்நுட்பப் புரட்சியின் முகங்களாகத் திகழ்கின்றனர்.

ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் மற்றும் மத்தியப் பிரதேசத்தின் பழங்குடியினப் பகுதிகளைச் சேர்ந்த பெண்கள், குஜராத்தின் சானந்தில் உள்ள CG Semi-ன் குறைக்கடத்தி உற்பத்தி ஆலையில் இயந்திர இயக்குநர்களாக இணைந்துள்ளனர். ஐடிஐ (ITI) மற்றும் மலேசியாவில் சிறப்புப் பயிற்சி பெற்ற இவர்கள், தற்போது அதிநவீன சிப் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த ஆலையைத் திறந்து வைத்த பிரதமர் நரேந்திர மோடி, இந்தத் பெண்களின் சாதனையைப் பாராட்டினார். சாதாரணப் பள்ளிகளில் பயின்ற இவர்கள், இன்று உலகின் மிகவும் மேம்பட்ட தொழில்நுட்பத் துறையில் பணியாற்றி வருவதை அவர் சுட்டிக்காட்டினார். பல பெண்கள் தங்கள் குடும்பத்திலேயே முதன்முதலில் வெளிநாடு சென்று தொழில்நுட்பத்தைக் கற்றுக் கொண்ட பெருமையைப் பெற்றுள்ளனர்.