அடுத்த போன் வாங்கத் திட்டமிடுபவர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி. குவால்காம் நிறுவனம் செப்டம்பர் 1 முதல் தனது அனைத்து பிராசஸர்களின் விலையையும் உயர்த்த உள்ளது.

குவால்காம் சிஇஓ கிறிஸ்டியானோ அமன் புதன்கிழமை கூறுகையில், செப்டம்பர் 1 முதல் நிறுவனத்தின் தயாரிப்புகளின் விலை உயரும் என்று தெரிவித்தார். கடந்த வாரம் இந்த விலை உயர்வு இரட்டை இலக்கு சதவீதத்தில் இருக்கலாம் என்று வதந்திகள் பரவின.

ஹேண்ட்செட் வணிகத்திலிருந்து குவால்காமின் வருவாய் ஆண்டுக்கு ஆண்டு 20 சதவீதம் குறைந்துள்ளது, இது 2021 ஆம் ஆண்டிற்குப் பிறகு மிகக் குறைவானதாகும். நினைவக விலையில் (memory pricing) ஏற்பட்டுள்ள முன்னெப்போதும் இல்லாத அதிகரிப்பால் இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.