வருமான வரித் தாக்கல் செய்ய ஜூலை 31 கடைசித் தேதி. காலக்கெடுவைத் தாண்டினால் ₹5,000 வரை அபராதம் மற்றும் வட்டி செலுத்த வேண்டியிருக்கும்.

வருமான வரித் தாக்கல் (ITR) செய்வதற்கான காலக்கெடு நெருங்கிவிட்டது. 2025-26 நிதியாண்டிற்கான வருமான வரித் தாக்கலைச் செய்ய சம்பளதாரர்கள் மற்றும் தனிநபர் வரி செலுத்துவோர் ஜூலை 31-க்குள் முடிக்க வேண்டும். மத்திய அரசு காலக்கெடுவை நீட்டிப்பதாக எந்த அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை.

காலக்கெடுவைத் தவறவிட்டால், பிரிவு 234F-ன் கீழ் ₹5,000 வரை தாமதக் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். வருமானம் ₹5 லட்சத்திற்கு குறைவாக இருந்தால் இந்தக் கட்டணம் ₹1,000 ஆக இருக்கும். மேலும், நிலுவையில் உள்ள வரிக்கு மாதத்திற்கு 1% வட்டி விதிக்கப்படும். தாமதமாகத் தாக்கல் செய்வதால் வரி ரீஃபண்ட் கிடைப்பதிலும் காலதாமதம் ஏற்படும்.