EPFO தனது புதிய ஆதார் அடிப்படையிலான டிஜிட்டல் போர்ட்டலை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் ஊழியர்கள் தங்களது பழைய அல்லது செயலிழந்த PF கணக்குகளை எளிதாகக் கண்டறியவும், இணைக்கவும் மற்றும் மாற்றவும் முடியும்.

ஊழியர்கள் இனி தங்கள் பழைய PF கணக்குகளைத் தேடி அலைந்து கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. EPFO அறிமுகப்படுத்தியுள்ள புதிய ஆதார் சார்ந்த டிஜிட்டல் போர்டல் மூலம், ஊழியர்கள் தங்களின் பழைய அல்லது செயல்பாட்டில் இல்லாத கணக்குகளை டிஜிட்டல் முறையில் அடையாளம் காணவும், கண்காணிக்கவும் மற்றும் உரிமை கோரவும் முடியும்.

இந்த புதிய போர்டல் மூலம் சுமார் 30 லட்சத்திற்கும் அதிகமான செயலிழந்த கணக்குகள் மற்றும் ரூ. 9,330 கோடி unclaimed தொகையை மீட்டெடுக்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆதார் அங்கீகாரத்தைப் பயன்படுத்துவதால், கணக்குகளை இணைப்பதும் மாற்றுவதும் மிகவும் எளிதாகிறது.

நிறுவனங்கள் தங்கள் புதிய பணியாளர்கள் பணியில் சேர்ந்த முதல் நாளிலேயே ஆதார்-PF சரிபார்ப்பை முடிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. இது எதிர்கால சிக்கல்களைத் தவிர்க்க உதவும்.