அமேசான் இந்தியா ஆகஸ்ட் 7 முதல் தனது 'கிரேட் பிரீடம் சேல்' விற்பனையைத் தொடங்குகிறது. இந்த விற்பனையில் ஸ்மார்ட்போன்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களுக்கு மிகப்பெரிய தள்ளுபடி காத்திருக்கிறது.

ஈ-காமர்ஸ் தளமான அமேசான் இந்தியா, ஆகஸ்ட் 7 முதல் 'கிரேட் பிரீடம் சேல்' என்ற பிரம்மாண்ட விற்பனையைத் தொடங்க உள்ளது. இந்த விற்பனைத் திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் பல்வேறு பொருட்களில் 80% வரை சேமிக்கும் வாய்ப்பைப் பெறலாம்.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் மொபைல் துணைக்கருவிகள் மீது 40% வரை தள்ளுபடி வழங்கப்படும். குறிப்பாக சாம்சங் கேலக்ஸி S25 அல்ட்ரா போன்ற பிரீமியம் போன்களுக்கு சிறந்த டீல்கள் கிடைக்கும். மேலும், ஏர் கண்டிஷனர்கள் மற்றும் ஸ்மார்ட் டிவிகள் மீது 65% வரையிலும், ஏர் பிரையர் போன்ற சமையலறை உபகரணங்கள் மீது 80% வரையிலும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.