ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கை குழு (MPC) இன்று ரெப்போ வட்டி விகிதம் குறித்து முக்கிய முடிவை அறிவிக்க உள்ளது. வட்டி விகிதம் மாற்றமடையாமல் அப்படியே இருக்க அதிக வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.

ரிசர்வ் வங்கியின் கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா இன்று புதன்கிழமை பணவியல் கொள்கை குழுவின் (MPC) முடிவை அறிவிக்கும் போது, ரெப்போ வட்டி விகிதத்தை மாற்றாமல் வைத்திருக்க வாய்ப்பு அதிகம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராயட்டர்ஸ் ஆய்வின்படி, கருத்துக்கேட்பப்பட்ட 72 பொருளாதார வல்லுநர்களில் 68 பேர் வட்டி விகிதம் மாறாது என்று கருதுகின்றனர்.

உலகளாவிய புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வால் பணவீக்க அபாயங்கள் இருந்தாலும், இந்தியாவின் பணவீக்க விகிதம் இன்னும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டு வரம்பிற்குள்ளேயே உள்ளது. வட்டி விகிதம் மாறாமல் இருந்தால், இது வீட்டு வசதி சந்தை மற்றும் கடன் வாங்குவோருக்கு ஸ்திரத்தன்மையை வழங்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.