இந்தியாவில் கார்ப்பரேட் முதலீடுகள் அதிகரித்துள்ளனாலும், நுகர்வோர் பொருட்களுக்கான தேவை குறைவாக இருப்பது பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐடி மற்றும் மின்சக்தி துறைகளில் அதிக முதலீடு செய்யப்பட்டுள்ளது.
சமீபத்திய தரவுகளின்படி, நடப்பு நிதியாண்டின் தொடக்கத்தில் இருந்து இந்தியப் பொருளாதாரம் ரூ. 26.75 லட்சம் கோடி மதிப்பிலான முதலீட்டு அறிவிப்புகளைப் பெற்றுள்ளது. இதில் 86% முதலீடுகள் உள்நாட்டுத் தனியார் துறையிடமிருந்து வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், இந்த முதலீடுகள் பெரும்பாலும் தகவல் தொழில்நுட்பம் (ITES) மற்றும் மின்சக்தி போன்ற குறிப்பிட்ட துறைகளில் மட்டுமே குவிந்துள்ளன.
மறுபுறம், நுகர்வோர் பொருட்கள் மற்றும் வாகனத் துறையில் முதலீடு என்பது 0.7% க்கும் குறைவாகவே உள்ளது. இது நுகர்வோர் தேவையின் போதிய குறைவைக் காட்டுகிறது. நுகர்வோர் தேவையில் ஏற்படும் இந்தத் தொடர்ச்சியான சரிவு, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியைப் (GDP) பாதிக்கும் காரணியாக மாறக்கூடும்.