மனநல பாதிப்பு காரணமாக விடுமுறை கேட்ட ஊழியரை பாஸ் மறுத்ததால், அந்த ஊழியர் வாட்ஸ்அப்பிலேயே தனது ராஜினாமாவைத் தெரிவித்துள்ளார். இந்த உரையாடல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தற்போதைய தலைமுறையினர் மனநல ஆரோக்கியத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கின்றனர். சமீபத்தில் ஒரு ஊழியர் தனது பதற்றமான மனநிலைக்காக (Anxiety) விடுமுறை கோரியபோது, அவரது மேலாளர் அதைத் தட்டிக்கேட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விடுமுறை கோருவதை 'தொழில்முறை அல்லாதது' என்று பாஸ் கூறியுள்ளார்.
இதற்கிடையில், அந்த ஊழியர் வாட்ஸ்அப் மூலமே தனது வேலையை ராஜினாமா செய்தார். அனுபவச் சான்றிதழ் பாதிக்கப்படும் என்று பாஸ் எச்சரித்த போதிலும், ஊழியர் தனது முடிவில் உறுதியாக இருந்தார். ஊழியர் கூறுகையில், 'மிரட்டல்கள் விடுக்கப்படும் இடத்தில் என்னால் வேலை செய்ய முடியாது' என்று தெரிவித்துள்ளார்.