கேம்பஸ் பிளேஸ்மெண்ட் முறையில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. நிறுவனங்கள் இப்போது AI, DevOps மற்றும் கிளவுட் போன்ற புதிய தொழில்நுட்பத் திறன்களைக் கொண்ட மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கின்றன.

இந்தியாவில் கேம்பஸ் பிளேஸ்மெண்ட் மூலம் மாணவர்கள் பெறும் வேலைவாய்ப்புகளில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. நிறுவனங்கள் இப்போது புதிய பட்டதாரிகளை பணியமர்த்துவதில் 73% அதிக ஆர்வம் காட்டி வருகின்றன. ஆனால், ஒரு வருடம் முன்பு வரை இல்லாத புதிய வகை வேலைப்பொறுப்புகளுக்காகவே இந்தத் தேடல் அமைகிறது.

AI மார்க்கெட்டிங் அசோசியேட், ஜூனியர் டெவொப்ஸ் இன்ஜினியர், நோ-கோட் வெப்சைட் டெவலப்பர், AI சாட்போட் சப்போர்ட் இன்ஜினியர் மற்றும் ஸ்மார்ட் கிரிட் ஆட்டோமேஷன் டெக்னீஷியன் ஆகிய ஐந்து துறைகளில் வேலைவாய்ப்புகள் வேகமாக வளர்ந்து வருகின்றன. நிறுவனங்கள் இப்போது பட்டப்படிப்பை மட்டும் பார்க்காமல், மாணவர்களின் தொழில்நுட்பத் திறன் மற்றும் செயல்முறைத் திறனை முக்கியமாகக் கருதுகின்றன. பெங்களூரு, டெல்லி மற்றும் புனே போன்ற நகரங்கள் இந்த புதிய வேலைகளின் மையமாக உருவெடுத்துள்ளன.