பெண் ஐபிஎஸ் அதிகாரியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, பயிற்சி பெறும் ஐபிஎஸ் அதிகாரி உதய கிருஷ்ணா ரெட்டி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத்தில் பயிற்சி பெறும் ஐபிஎஸ் அதிகாரி உதய கிருஷ்ணா ரெட்டி காவல்துறையினரால் பிடிபட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார். தேசிய காவல் அகாடமியில் ஒரு பெண் பயிற்சி பெறும் ஐபிஎஸ் அதிகாரியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், அவரது தனிப்பட்ட வீடியோக்களைத் துணவருக்கு அனுப்பியதாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் கடந்த 18-ம் தேதி அட்டப்பூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்டவர் தனது செல்போனை அணைத்து வைத்துக்கொண்டு தலைமறைவாகியிருந்தார். அவரைத் தேட நான்கு சிறப்புப் புலனாய்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டு, தற்போது அவர் பிடிபட்டுள்ளார். மருத்துவப் பரிசோதனையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் கழுத்து மற்றும் முகத்தில் காயங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர் விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.