அகமதாபாத்தில் உள்ள ஒரு குடியிருப்பின் மொட்டை மாடியில் பாதுகாவலர் ஒருவரால் 23 வயது மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். குற்றம் சாட்டப்பட்ட பாதுகாவலர் அந்த குடியிருப்பில் சேர்ந்த வெறும் 4 நாட்களே ஆகிறது.

அகமதாபாத்தில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் அதிர்ச்சியளிக்கும் சம்பவம் நடந்துள்ளது. மாலை நேரத்தில் நடைப்பயிற்சி சென்ற 23 வயது பெண், மொட்டை மாடியில் இருந்த பாதுகாவலரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானார்.

குற்றம் சாட்டப்பட்ட பாதுகாவலர் அந்த குடியிருப்பில் பணியில் சேர்ந்தது வெறும் நான்கு நாட்களுக்கு முன்புதான் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். காவல்துறை உடனடியாக செயல்பட்டு குற்றவாளியை கைது செய்துள்ளது.