டெல்லி சிறைகளில் இயற்கையல்லாத முறையில் உயிரிழக்கும் கைதிகளின் குடும்பங்களுக்கு ரூ. 5 லட்சம் முதல் ரூ. 7.5 லட்சம் வரை இழப்பீடு வழங்கும் திட்டத்தை டெல்லி அரசு அறிவித்துள்ளது.
டெல்லி சிறைகளில் கைதிகள் இயற்கையல்லாத சூழ்நிலையில் இறக்கும் போது, அவர்களின் குடும்பத்தினருக்கு அல்லது சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு இழப்பீடு வழங்கும் திட்டத்தை டெல்லி அரசு அறிவித்துள்ளது. தேசிய மனித உரிமைகல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களின்படி இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
கைதிகளுக்கிடையேயான மோதல் அல்லது சிறை அதிகாரிகளின் சித்திரவதையால் death ஏற்பட்டால் ரூ. 7.5 லட்சம் வழங்கப்படும். சிறை ஊழியர்களின் அலட்சியம் அல்லது தற்கொலை போன்ற நிகழ்வுகளுக்கு ரூ. 5 லட்சம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இயற்கை மரணங்கள் அல்லது நோய் காரணமாக ஏற்படும் மரணங்களுக்கு இந்தத் திட்டம் பொருந்தாது.