சான் டியாகோ கமிக்-கானில் ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ படத்தின் பிரத்யேக டிரெய்லர் காண்பிக்கப்பட்டது. இதில் ராபர்ட் டௌனி ஜூனியர் டாக்டர் டூமாக அவெஞ்சர்ஸ், ஃபேண்டாஸ்டிக் ஃபோர் மற்றும் எக்ஸ்-மென்ஸை அழிக்க சென்டினல் ரோபோக்களைப் பயன்படுத்துவதை காண முடிகிறது.

மார்வெல் ஸ்டுடியோஸ் தலைவர் கெவின் ஃபைஜி, சான் டியாகோ கமிக்-கான் ஹால் H-ல் உள்ள ரசிகர்களுக்கு ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ படத்தின் பிரத்யேக காட்சிகளைக் காட்டி ஆச்சரியப்படுத்தினார். டிரெய்லரின் தொடக்கத்தில் விக்டர் வான் டூம் (ராபர்ட் டௌனி ஜூனியர்) ஒரு சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பதை காண முடிகிறது. சு ஸ்டார்ம் (வெனெசா கிர்பி) டூமுடன் ஃபேண்டாஸ்டிக் ஃபோர் குழுவிற்கு இருக்கும் சிக்கலான உறவைப் பற்றி விளக்குகிறார்.

டிரெய்லரில் தோர், கேப்டன் அமெரிக்கா, பிளாக் பான்தர் மற்றும் ஷாங்-சி உள்ளிட்ட பல முக்கிய கதாபாத்திரங்களின் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அழிந்துபோன நியூயார்க் நகரின் பின்னணியில், டூம் தனது மந்திர சக்தியால் தோரை வீழ்த்தி, எக்ஸ்-மென் படங்களில் வரும் புகழ்பெற்ற சென்டினல் ரோபோக்களின் படையை உருவாக்குகிறார். இந்த படை அவெஞ்சர்ஸ் மற்றும் எக்ஸ்-மென் குழுக்களை எதிர்கொள்ளத் தயாராக உள்ளது.

மார்வெல் ரசிகர்கள் இந்த பிரம்மாண்ட போரை காண டிசம்பர் 18 வரை காத்திருக்க வேண்டும். இதில் அவெஞ்சர்ஸ், ஃபேண்டாஸ்டிக் ஃபோர், தண்டர்போல்ட்ஸ் மற்றும் எக்ஸ்-மென் குழுக்கள் ஒன்றிணைந்து ஒரு மிகப்பெரிய போரை நடத்தவுள்ளன.