சமய் ரெய்னாவின் 'இண்டியாஸ் காட் லேட்டன்ட்' ஷோவில் பங்கேற்ற பாடகர் கரண் அவுஜ்லா, தனது சர்ச்சைக்குரிய பாடல் மற்றும் வழக்கு குறித்து நகைச்சுவையாகப் பேசியுள்ளார். துபாய் பயணம் மற்றும் மின்சாரம் தடைபட்ட தருணத்தில் அவர் பேசிய கருத்துக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
பிரபல பஞ்சாபி பாடகர் கரண் அவுஜ்லா, சமய் ரெய்னாவின் 'இண்டியாஸ் காட் லேட்டன்ட்' சீசன் 2 நிகழ்ச்சியில் நீதிபதியாகப் பங்கேற்றார். நிகழ்ச்சியின் போது அவரது 'MF Gabru' பாடல் தொடர்பான சட்ட சிக்கல்கள் குறித்து பேசும்போது, அவர் மிகவும் கலகலப்பான முறையில் பதிலளித்தார். இது பார்வையாளர்களை வெகுவாக சிரிக்க வைத்தது.
நிகழ்ச்சியின் போது, பெரும்பாலானவர்கள் ஷோ முடிந்ததும் துபாய்க்குச் செல்வார்கள் என்று சமய் ரெய்னா கிண்டல் செய்ய, கரண் அவுஜ்லா தான் ஏற்கனவே துபாய்க்கு டிக்கெட் முன்பதிவு செய்துவிட்டதாகவும், ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் உடனே அங்கிருந்து கிளம்பிவிடுவேன் என்றும் நகைச்சுவையாகக் கூறினார். மேலும், நிகழ்ச்சியில் மின்சாரம் தடைபட்ட போது அவர் பேசிய ஒரு நகைச்சுவை கருத்தும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.