காலநிலை மாற்றத்தால் 1981 ஆம் ஆண்டிலிருந்து தெற்கு ஐரோப்பாவில் காட்டுத்தீ ஏற்படும் வாய்ப்பு இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

தெற்கு ஐரோப்பா அதிக எளிதில் தீப்பற்றக்கூடிய நிலையை நோக்கிச் சென்று வருவதாகப் புதிய அறிக்கை கூறுகிறது. 1981 ஆம் ஆண்டிலிருந்து தீப்பற்றக்கூடிய சூழல் கொண்ட கோடைகால நாட்களின் எண்ணிக்கை இரண்டு மடங்குக்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. 'சயின்டிஃபிக் ரிப்போர்ட்ஸ்' இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு, காலநிலை மாற்றமே இந்தத் தீயினால் ஏற்படும் தீவிர அதிகரிப்பிற்கு முக்கிய காரணம் என்று கூறுகிறது.

பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் சமீபத்திய வாரங்களில் மிகப்பெரிய காட்டுத்தீயை மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர். கடும் வெப்பம், குறைந்த ஈரப்பதம் மற்றும் பலத்த காற்று போன்ற காரணிகள் உலக வெப்பமயமாதலால் ஏற்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் மழை பெய்ததால் நிலைமை ஓரளவு சீராக இருந்தாலும், கிரீஸ், துருக்கி மற்றும் இங்கிலாந்தில் தீ விபத்துகள் தொடர்ந்து வருகின்றன.