ஹரியானாவின் ஃபதேஹாபாத்தில் அங்கன்வாடி பணியாளர் மற்றும் அவரது இரு குழந்தைகள் தண்ணீர் தொட்டியிலிருந்து சடலங்களாக மீட்கப்பட்டனர். கணவரின் கொடுமைகளை வீடியோவில் பதிவிட்ட பெண், குழந்தைகளுடன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஹரியானாவின் ஃபதேஹாபாத் மாவட்டத்தில் உள்ள மெஹுவாலா கிராமத்தில் அங்கன்வாடி பணியாளரான சுதேஷ் மற்றும் அவரது இரு குழந்தைகள் மர்மமான முறையில் உயிரிழந்தனர். இவர்களின் உடல்கள் வீட்டிலிருந்த தண்ணீர் தொட்டியிலிருந்து மீட்கப்பட்டன. கணவரின் மதுப் பழக்கம் மற்றும் மன உளைச்சலால் பாதிக்கப்பட்ட சுதேஷ், தற்கொலைக்கு முன் தனது வேதனையை வீடியோவாகப் பதிவிட்டு சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.
முதலில் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தண்ணீர் தொட்டியில் தள்ளிய பெண், பின்னர் தானும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர் அளித்த புகாரின் அடிப்படையில், அவரது கணவர் சந்தீப் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது உடல்கள் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.